மட்டக்களப்பில் தேர்தலில் தோல்வியடைந்த இருவர் பிரதேசசபையின் தவிசாளர்கள்.

0
1386

(வேதாந்தி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த உள்ளூராட்சித்தேர்தலில் போட்டியிட்டு வட்டாரரீதியில் தோல்வியினைத்தழுவிக்கொண்ட இருவர் பிரதேசசபைகளின் தவிசாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில்  வாழைச்சேனை பிரதேசசபையில்தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு வட்டார ரீதியில் தோல்வியினைத்தழுவிக்கொண்ட திருமதி சோபா ஜெயரஞ்சித்  பட்டியல்  ஊடாக தெரிவு செய்யப்பட்டு  தவிசாளர் தெரிவின்போது12 வாக்குகளைப் பெற்று வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின்தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று ஆரையம்பதி (மண்முனைப்பற்று) பிரதேசசயைில் ஆரையம்பதியில் வட்டார ரீதியாக போட்டியிட்டு தோல்வியினை தழுவிக்கொண்ட சோ.மகேந்திரலிங்கம் சுயேட்சைக்குழு 01இல் போனஸ் ஆசனம் மூலம் தெரிவுசெய்யப்பட்டு மண்முனைப்பற்றின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.