மட்டக்களப்பில் மூங்கில் வளர்க்கும் திட்டம் விரைவில்…

0
429

மூங்கில் வளர்க்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது கிரான் சாளம்பச்சேனை கிராமமும் உள்வாங்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான சாளம்பச்சேனையில் 2009ம் ஆண்டு யுத்தத்தினால் சீரிக்கப்பட்டு மீள் எழுச்சி பெற்ற கிராம அபிவிருத்திச் சங்க கட்டட திறப்பு விழாவில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

சாளம்பச்சேனை கிராமத்தில் உள்ள வளங்களைக் கொண்டு மூங்கில் வளர்க்கும் திட்டத்தினை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும். மூங்கில் வளர்க்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் போது இக்கிராமமும் இத்திட்டத்தினுள் உள்வாங்கப்படும்.

தற்போது இருப்பவர்கள் இனிவரும் சந்ததியினருக்கு ஒரு நல்ல வழியை காட்டும் வகையில் செயற்பட வேண்டும். இங்குள்ளவர்கள் கிராம பின்னனியை சிதைக்க வேண்டாம். பல இடங்களில் கிராமங்களை இழந்துள்ளோம். தற்போது கிராமங்கள் செயற்கையான அமைப்புக்கள் கொண்டுவரப்பட்டு அடையாளங்கள் எல்லாம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

கிராமங்களுக்குரிய அடையாளங்களை நீங்கள் பேண வேண்டும். அத்தோடு உங்களுடைய பிள்ளைகளை நல்ல முறையில் நூறு வீதமாக கல்வியினை கற்க வழி வகை செய்யுங்கள். சாளம்பச்சேனை கிராம மக்களால் வழங்கப்பட்ட தேவைகள் தொடர்பாக பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கையை மேற்கொள்வேன். அத்தோடு வீட்டுப் பிரச்சனைகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்.

இந்த அடிப்படை வசதிகளை நாங்கள் ஏற்படுத்தி வழங்குவோம். என்னைப் பொறுத்த வரையில் பணத்தை கொண்டு காட்டுவதை விட ஒரு தொழில் துறையை காட்டுவதே மேலாக நினைக்கின்றேன். அந்த வகையில் ஜனாதிபதியின் கிராமங்களை வலுப்படுத்தும் திட்டத்தில் சாளம்பச்சேனை கிராமத்தினை உற்பத்திக் கிராமமாக உள்வாங்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டினுடைய முதுகெழும்பு மத்திக் கிராமம், கிராமத்தில் செய்யும் செயற்பாடுகள் தான் நகரத்திலும் செய்யப்படும். கிராமத்தை வலுப்படுத்துவதன் மூலம் நகரத்தை கட்டியெழுப்பலாம். அந்த விடயத்தில் செயலாற்றுகின்றோம். கடந்த காலத்தில் நகர பகுதியில் கிளசரியா மரம் இருந்தது. ஆனால் தற்போது நகரப்பகுதியில் காணவில்லை. கிளசரியா வளர்ப்பதால் அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.