பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை

0
291
இலங்கை போக்குவரத்து சபை – தனியார் பஸ் மற்றும் ரயிம் பயணிகளுக்கு  இலத்திரனியல் அட்டையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த டச்  கார்ட்டை பயணிகளினால் கொள்வனவு செய்ய முடிவதுடன் பஸ் அல்லது ரயில்களில் பயணிக்கும் பொழுது பயண கட்டணம் இந்த அட்டையில் குறைத்துக் கொள்ளப்படும்.
போக்குவரத்து ஆணைக்குழுவும் திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் இலங்கை பேய் (Pay) நிறுவனமும் ஒன்றிணைந்து இந்த அட்டையை தயார் செய்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜி.பி.ஹேமசந்திர தெரிவித்தார்.
இந்த கார்ட் முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் பயணிகளுக்கு மிகுதி பணத்தi பெற்றுக்கொள்ளும் பிரச்சனையை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும்  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜி.பி.ஹேமசந்திர மேலும் கூறினார்.