பனிச்சங்கேணி மீனவர் உயிரிழப்பு

0
599

வாகரைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி ஆற்றில் வயோதிப மீனவர் ஒருவர் புதன்கிழமை மாலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பனிச்சங்கேணி சல்லித்தீவில் வசிக்கும் மீனவர் வேறுப்பிள்ளை தங்கராசா (வயது 64) என்பவரே பனிச்சங்கேணி ஆற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த மீனவர் மீன் பிடிப்பதற்கு ஆற்றில் இறங்கிய வேளையில் பள்ளத்தினுள் அகப்பட்டு இறந்துள்ளார்.

குறித்த மீனவரின் சடலம் வாகரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.