மே மாதம் 7ஆம் திகதி பொதுவிடுமுறை

0
250

விசாக நோன்மதி வாரத்தை முன்னிட்டு சர்வதேச மேதின நிகழ்ச்சிகளை மே மாதம் 7ஆம் திகதி நடத்துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்காரணமாக மே மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்ட விடுமுறையை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

இதற்கு பதிலாக மே மாதம் 7ஆம் திகதியை பொது மற்றும் வங்கி விடுமுறையாக பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன வெளியிட்டுள்ளார்.