கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு பூசை

0
422

வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு பூசை நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை(14) காலை 07.00மணிக்கு நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலனசபையின் வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார்.

புதிய விளம்பி வருடம் 2018.04.14ம் திகதி சனிக்கிழமை காலை 07.00மணியளவில் பிறக்கின்றது. இத்தினத்தில் அதிகாலை 3.00மணி தொடக்கம் பகல் 11.00மணி வரையான காலப்பகுதியில் காலுக்கு ஆலையிலையும், தலைக்கு கொன்றையிலையும் வைத்து மருத்து நீர் தேய்க்க முடியுமென கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினால் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.