ஈர நிலப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்

0
225

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஈர (சதுப்பு ) நிலங்களை பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ம.உதயகுமார் தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளஈர நிலங்களை பாதுகாப்பதற்கான பல்வேறுபட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரச அதிபர் குறிப்பாக சந்துருகொண்டான் ஈர நிலம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவையாவும் ஒருங்கிணைக்கப்பட்டு இப்பகுதியை பாதுகாத்து சூழலியல் தொடர்பான உல்லாச பிரயாணத்துறை கட்டியெழுப்பப்படுவதுடன் இதனை இப் பகுதி சமூகமே பொறுப்பேற்று செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடல் வேண்டும் என குறிப்பிட்டார்.

இதில் கருத்து தெரிவித்த, கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம், இப் பகுதியின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தனது அறிக்கையை சமர்பிப்பதுடன் இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு நேரில் இப்பகுதியைப் பார்வையிட்டு தீர்மானங்களை எடுப்பது சிறந்தது எனதெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்கஅதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் ,மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணரெட்ணம் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.