மட்டக்களப்பு வலையிறவுப்பாலத்தில் தெருவிளக்கு பொருத்தப்படவேண்டும்.

0
123

க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்டம் பூகோளரீதியில் நோக்கும் போது சமதளம் கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வனம்கொழிக்கும் பிரதேசமாகும்.இம்மாவட்டம் நிலத்தோற்ற அடிப்படையில் படுவான்கரை,எழுவான்கரை எனஇருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.படுவான்கரையையும்,எழுவான்கரையும் நிலத்தொடர்புகளுடன் இணைப்பது பாலங்களாகும்.பட்டிருப்புபாலம்,மண்முனைப்பாலம்,வலையிறவுப்பாலம்,கல்லடிப்பாலம்,செங்கலடி-பதுளைவீதிபாலம் என முதன்மையான பாலங்களாகும்.இவ்வாறு படுவான்கரையையும்,எழுவான்கரையையும் பாலங்கள் இணைந்திருப்பதால் பொதுமக்களின் போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் போக்குவரத்துக்கள் சிறப்பாகவிருக்கும்போதுதான் ஒரு மனிதசமூகம் வளர்ச்சியடைந்துள்ள சமூகமாக மாற்றமடையும் என்பது உண்மையாகும்.அந்தவகையில் வலையிறவுப்பாலம் மட்டக்களப்பில் முதன்முதலாக கட்டப்பட்ட பாலமாகும்.1972ஆம் ஆண்டு ராஜன் செல்வநாயகத்தால் வலையிறவுப்பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.அடிக்கல் நாட்டி வைத்தது மட்டும்தான் பாலம் அமைப்பது கைகூடவில்லை.1982 ஆம் ஆண்டு மீண்டும் அப்போதைய பிரதேச அமைச்சர் செல்லையா இராசதுரை என்பரால் மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது.இருந்தும் இம்முயற்ச்சி கைகூடவில்லை.மீண்டும் கைகூடவில்லை.அதன்பின்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஆகியோர்களின் வழிகாட்டல்களுடன் 110 மில்லியன் ரூபா நிதியில் கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் 2013.10.28 ஆம்திகதி கட்டிமுடிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இவ்வலையிறவுப்பாலம்  இரண்டு கிலோமீற்றர் நீளம் உடையதாகும்.இப்பாலத்தில் இரண்டு பாலங்கள் உள்ளது.மண்முனை வடக்கு பிரதேச செயலகம்,வவுணதீவு பிரதேச செயலங்களின் எல்லையாகவும் உள்ளது.இப்பாலத்தில் நீண்டநாட்களாக தெருவிளக்கு பொருத்தப்படவில்லை.மழைகாலங்களில் இப்பாலத்தின் வழியாக போக்குவரத்து செய்யமுடியாது.பிரதேசத்தில் பெய்கின்ற மநீரானது வயல்வெளியாக ஓடி ஆற்றைச் சென்றடையும்.ஆற்றில் அதிகமான மழையினால் நீர்மட்டம் அதிகரிக்கும்.நீர்மட்டத்தினாலும்,மழையினாலும் வலையிறவுப்பாலத்தின் இடையே உள்ள வீதியில் சுமார் 5அடி நீர் மேவிப்பாயும்.இதனால் படுவான்கரையும்,எழுவான்கரையும் வெள்ளத்தின் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்படும்.பொதுமக்கள் மழைகாலங்களில் தங்களின் தேவைகள்,சேவைகளையும் பெறுவதற்கும்,அரசாங்க ஊழியர்கள் கடமையை மேற்கொள்ளுவதற்கும் படகுமூலம்தான் போக்குவரத்து செய்யமுடியும்.மழைகாலங்களில் வானம் முகில் கூட்டங்களாக இருள் சூழ்ந்து காணப்படும்.இதனால் இவ்வீதியினை பயன்படுத்தும் மக்கள் சரியானதாக போக்குவரத்தை மேற்கொள்ள முடியாது.
வலையிறவுப்பாலத்தின் ஊடாக பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்களௌ,அதிபர்கள்,அரச திணைக்கள,அரசசார்பற்ற உத்தியோகஸ்தர்கள் எனப்பயன்படுத்தும் இவ்வீதியின் தெருவிளக்கு பற்றிய எண்ணம் யாருக்கும் இதுவரையும் வரவில்லை.பிரதேசத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி இப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர்கள் இருந்தும் இப்பாலத்தின் குறைபாடுகள்,தேவைகள் பாராளுமன்றத்திலோ அல்லது மாவட்ட அபிவிருத்திகுழுக்கூட்டத்திலோ தெரிவித்து தெருவிளக்கு பொருத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம்.தேர்தல்காலங்களில் மட்டும்தான் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வாக்களியுங்கள் என்று கேட்பார்கள்.தேர்தல் முடிந்து கதிரையில் ஏறினால் பொதுமக்களை திரும்பிப்பார்க்கமாட்டார்கள்.இது தமிழ்மக்களுக்கு காலகாலமாக இருந்து வருகின்றது.
வலையிறவுப்பாலத்தில் வழியாக இலங்கை மின்சாரசபையின்மூலம் மின்கம்பங்கள் நாட்டப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.சில மின்கம்பங்கள் சரிந்து காணப்படுகின்றது.இவ்வீதியில் கிழக்குபக்கத்தில் ஆரம்பிக்குமிடத்தில் ஒரு பாலமும்,முடிவடையும் மேற்குப்பக்கத்தில் ஒருபாலமும் மொத்தமாக இரண்டு பாலங்கள் அமைந்துள்ளது.இம்மக்களின் நீண்டகாலத்து எதிர்பார்ப்புத்தான் தெருவிளக்குப்பிரச்சனையாகும்.இப்பாலத்தில் தெருவிளக்கு பொருத்திக்கொடுத்தால் போதும்.இப்பிரதேசம் வெளிச்சத்துடன் பிரகாசிக்கும்.அதுபோல் இம்மக்களின் வாழ்விலும் பிரகாசமான வெளிச்சம் தோன்றும்.மழைநீரைக் கண்ட பயிர் மகிழ்ச்சியடைவதுபோல் படுவான்கரை மக்களும் தெருவிளக்கினால் மகிழ்ச்சியடைவார்கள்.மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள்,அரச அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வலையிறவுப்பாலத்தில் தெருவிளக்கு பொருத்திக்கொடுக்கப்பட வேண்டும்.