வழியை மறித்து பழம்கேட்கும் யானைகள்!

0
432
புத்தல இருந்து கதிர்காமம் நோக்கிச்செல்லும் பிரதானவீதியில் யானைகள் வழியை மறித்து பழம் கேட்கின்றன. பழம் கொடுத்தால் மட்டுமே வழி விடும். இது அப்பாதையால் செல்வோருக்கு பழகிவிட்டது. தெரியாதவர்கள் யானை செல்லும்வரை தூரநிற்பார்கள்.அதுவும் நிற்கும். இனி பழக்கப்பட்டவர்கள் வரும்போது அவர்கள் அருகேசென்றறு பழம் வழங்க அதன்பின்னால் ஏனையோரும் செல்வார்கள். வாகனங்கள் வராதவேளையில் இவ்யானைகள் வீதியின் ஓரத்தில் பற்றைகளுக்குள் நிற்கும். வாகனம் வந்தால் இலேசாக வீதிக்கு மத்திக்கு வந்து வழிமறித்துநிற்கும். வாகனங்கள் அருகே சென்றதும் தும்பிக்கையை நீட்டி பழம் கேட்கும். பழங்களை வழங்கினால் அது தன்பாட்டில் வழியைவிட்டு ஒதுங்கும். அவ்வாறான சம்பவமொன்றை இங்கு காண்கிறீர்கள்.

படங்கள் காரைதீவு   சகா