இணையத்தின் ஊடாக வாகன சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூலப் பரீட்சை

0
535

வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான எழுத்து மூலப் பரீட்சையை மே மாதம் முதலாம் திகதி முதல் இணையத்தின் ஊடாக நடத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எழுத்து மூலப் பரீட்சையில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் வகையிலும், விரைவாக பெறுபேறுகளை நோக்கத்துடனும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே ஜகத் சந்திரசிறி கூறியுள்ளார்.

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின், வெஹரஹர காரியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து அமைச்சர் நிமல் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய முதலில் வெஹரஹர காரியாலயத்தில் புதிய இணையம் மூலமான பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, 160 கணனிகளை  நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  அவர் கூறினார்.

குறித்த இணைய மூலமான பரீட்சை செயற்றிட்டத்தை நாடு முழுவதிலும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டுவர முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.