முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இப்போதே தீர்மானிக்க முடியாது

0
437

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இப்போதே தீர்மானிக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று திருகோணமலையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக தற்போதையை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்பட மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த விடையம் தொடர்பில் அவரிடம் வினவிய போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபைக்கான அடுத்த தேர்தலின் போது, முதலமைச்சராக நிறுத்தப்படவுள்ளவர் குறித்து இப்போதே தீர்மானிக்க முடியாது

மேலும், அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு ஒருமாத காலம் போதும் ஆனால், இந்த தீர்வு காணும் விடயம் ஏற்கனவே தாமதமாகியுள்ளது.

அனைத்து மக்களுக்கு தேவையான விடயமாக அரசியல் தீர்வு அமையப்பெற்றுள்ளது, இனியும் இந்த விடயம் தீர்க்கபடாவிட்டால் நாடு வீணாகிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று காலை இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுஃப் ஹக்கீம் அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு விஜயம் செய்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(TN)