நாசீவந்தீவு மக்களுக்கு புதுவருட ஆடை வழங்கல்

0
415

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் க.கமலநேசன் வறுமையை ஒழிப்போம் என்னும் தொனிப் பொருளில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்.

அந்தவகையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பின்தங்கிய கஷ்டப் பிரதேசத்தில் வாழும் முதியோர்கள் மற்றும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆடை வழங்கப்பட்டு வருகின்றது.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு முதல் கட்டமாக வாழைச்சேனை நாசீவந்தீவு பிரதேசத்தில் நூறு பேருக்கு புத்தாடைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு இரண்டாம் கட்டமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரம்படித்தீவு, பூலாக்காடு ஆகிய பிரதேசத்திலுள்ள முதியோர்கள் மற்றும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கி வைக்கப்படும் எனவும், ஆடை வழங்குவதற்கு உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் க.கமலநேசன் தெரிவித்தார்.