தமிழ் மொழி வழிபாட்டை ஆலயங்களிலே கொண்டு வரவேண்டும்.மூத்த கவிஞர் கந்தையா கனக சிங்கம் .

0
559

“நாம் தமிழிலே பேசினால் எங்களை சிலர் தவறாக மதிப்பார்கள் என பலரும் கருவதுண்டு” இந்த நிலை மாறவேண்டும் தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடான என்பதற்கிணங்க நாம் செயற்படவேண்டும்”

அவ்வாறான பெருமைக்குரியது எமது தமிழ் மொழியாகும் என மூத்த கவிஞர் கட்டைபறிச்சான் கந்தையா கனக சிங்கம் குறிப்பிட்டார்.;

சம்பூரில் இடம்பெற்ற முத்தமிழ் விழாவில் “தமிழ் மொழியின் பன்முகப்பயன்பாடு”என்ற தலைப்பில் விஷேட உரையாற்றினார். இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி தமிழ் என்று சொல்வார்கள். நாங்கள் படிக்கும் காலத்தில் இதனைஆசிரியர்கள் கூறும்போது நாம் விளங்கிகொள்ள வில்லை.

உலகத்திலே முதன்முதல் தோன்றிய இனம் தமிழ் இனம் என்று பலரும் சொல்வார்கள் இன்று அதுதான் உண்மை என்பது உணரப்பட்டு வருகிறது.அது குமரிக்கண்டத்திலேதான் தோன்றியது.

அந்த மொழிதான் உலகத்தில் இருக்கும் பல மொழிகளுக்க தாயாக விளங்குகின்றது என்ற கருத்து மெல்ல உறுப்படுத்தப்பட்டு வருகின்றது.

இது காலம் கடந்த மொழி, கடல்கடந்த மொழி, ஞாலம் கடந்த மொழி,என உலகத்தில் வியாபித்திருக்கின்றது. இதனாலேயே இதற்கான உலகத்தமிழ் ஆய்வு மன்றம்; உலகில் ஏற்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்ற நிலையை நாங்கள் காண்கின்றோம்.

தமிழ் மொழி இயல்பாக தோன்றிய மொழி என்பதனால் இயன் மொழி என அழைக்கப்படுகின்றது.இயன்மொழிக்கான பண்புகள் 16 இருக்கின்றன. அந்த 16 பண்புகள் எந்த மொழிக்கு இருக்கின்றதோ அதுவே இயன் மொழி இயற்கையான மொழி என்று ஏற்றுக்கொள்ளப்படும். அதனடிப்படையில் இந்த பண்புகளை யுடைய மொழி தமிழ் மொழியாகும்.

உலகத்திலே உள்ள பல மொழிகளிலே தமிழ்ச்சொற்கள் பல கலந்திருக்கின்றன.ஒரு மொழிக்கு தாய்மைப்பண்புஇருக்க வேண்டும். ஆகவே தமிழ்மொழிக்கு அந்த பண்பு உள்ளன. அதிலிருந்து பல மொழிகள் பிறந்திருக்கின்றன. தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டால் கன்னடம், தெலுங்கு, மலையாளம்,துளு என பலமொழிகள் உருவாகியுள்ளன.பல சொற்களைப்பார்த்தால் பல மொழிகளில் அவை பரிணமித்திருப்பதனைக்காணலாம்.உதாரணமாக கொரிய மொழியில் நாம் பாவிக்கும் அம்மா, அப்பாஈ என்ற சொற்கள் அப்படியே பாவிக்கப்படவதனைக்காணலாம். சில மொழிகளில் சில திருத்தங்களுடன் இருப்பதனைக்காணலாம்.

இவ்வாறு பார்த்தால் ஏறக்குறைய உலகத்தில் உள்ள 200மொழிகளிலே தமிழ் மொழியின் செல்வாக்கு இருக்கிறது.என அறிஞர்கள் கூறுகிறார்கள்.எம்மத்தியில் உள்ள சில பிரச்சைனைகள் உள்ளன. எமது சொற்களுடன் சில சொற்களை நாம் கலந்து பேசினால்தான் நாகரீகம் என நாம் கருதகின்றோம்.அவ்வாறு பேசுபவர்கள் தான் படித்தவர்கள் என நாம் நினைக்கின்றோம்.

நாம் தமிழிலே பேசினால் எங்களை சிலர் தவறாக மதிப்பார்கள் என பலரும் கருவதுண்டு.

அண்மையில் நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு செல்லும்வாய்ப்ப கிடைத்தது. அங்கு ஒரு நிறுவனத்தின் தலைவருடன் உரையாடக்கிடைத்தது. அங்கு எம்மால் உணரமுடிந்தது 99வீதமானவர்களுக்கு ஆங்கிலம் தெரியாத நிலமை காணப்பட்டது.ஆனால் அந்த நாட்டைப்போல் முன்னேறும் நாடு இந்த உலகத்தில் இல்லை.அவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்றால் அவர்கள் தமது மொழியிலேயே சிந்திக்கிறார்கள் அந்த மொழியிலே படிக்கிறார்கள் எழுதுகிறார்கள்.அதனால்தான் அந்த நாடு உலகத்தில் மிகச்சிறந்த நாடாக மிளிர்கின்றது.

நாங்கள் எமது பிள்ளைக்கு தமிழ் தெரியாது என்றால் அதனைப்பெருமையாக சொல்லும் மக்களாகவுள்ளோம்.

சுமோ அனொ என்பவர், அவர்மொழி ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட ஒருவர். அவர் என்ன சொல்லுகின்றார் என்றால்? ஜப்பானிய மொழியின் தாய் மொழி தமிழ் தான் எனச்சொல்லியுள்ளார். அதனை அவர் உறுதிபடத்தெரிவித்துள்ளார்.

ஆகவே எங்களுக்கு வேறு சான்று எதுவும் தேiயில்லை. தமிழென்று சொல்லடா,தலைநிமிர்ந்து நில்லிடா என்பது பகுடியான விடயமல்ல.நாம் அதனை பகுடியாக மாற்றி தலைகுனிந்தவர்களாக செல்கிறோம். ஆகவே அந்த நிலமையை நாம் மாற்ற வேண்டும்.

அந்த மொழிக்குரியவர்கள் என நாம் எப்போது உரத்து சொல்கிறோமோ அப்போதுதான் நாம் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.

தமிழ் நாட்டில் அன்நியரின் படையெடுப்பு போன்ற காரணங்களால் இந்த மொழியில் பல பாதிப்புக்கள் ஏற்பட்டன. இதனால் பல பெரியார்கள் நமது மொழியை செம்மொழியாக்க வேண்டும் என போரட முனைந்தார்கள்.

மறைமலை அடிகள்,பெரும்சித்தனார்,தேவநாயக பாவணர், முயன் முஸ்தபா, போன்றவர்கள் இதற்காக போராடினார்கள், முயற்சித்தார்கள்.

இந்த செம்மொழி என்பதனை நாம் பார்த்தால் அதற்கு 11 பண்புகள் உள்ளன.

தொன்மை, தனித்தன்மை,பொதுமைப்பண்பு,நடுவநிலமை,தாய்மைத்தன்மை,பண்பாடு. கலை,பட்டறிவுவெளிப்பாடு,பிறமொழித்தாக்கமிலாத்தன்மை,இலக்கிய வழம்,உயர்சிந்தனை,கலை இலக்கியதனித்தன்மை பண்பாட்டு வெளிப்பாடு பங்களிப்பு,மொழிக்கோட்பாடு.

இவ்வாறான 11 பண்பகள் இருந்தால் அது செம்மொழி என்ற நிலையை அடையலாம்.அந்த நிலமைக்கு உயர்த்தலாம் என்று அறிஞர்கள் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.இப்படி இருந்தாலும் தமிழ் தற்போது 7வதாகத்தான் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதற்கு முன்னர் அறுமொழிகள் இருந்தன.இலத்தின்மொழி,கிபுறோ,கிரேக்மொழி,சமஸ்கிரதம்,பாரசீகம்,அறபு என்ற ஆறு மொழிகள் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.ஆனால் மேற்சொன்ன ஆறுமொழிகளிலும் ஏலவே குறிப்பிட்ட 11 பண்பகளும் இல்லை.ஒருசில பண்பகள் இல்லாமல் இருக்கின்றன. ஆகவே முழமையாக மொழியியல் அறிஞர்களால் ஏற்றுக்கொண்ட 11 பண்புகளையும் கொண்ட மொழி தமிழ் மொழிதான் என்பது பெருமைக்குரிய விடயம்.

வானியல். கணிதம், கணணி, கட்டிடக்கலை போன்ற பல விடயங்கள் உள்ளன.எமது மொழியில் காணப்படுகின்றது. இலக்கியம் உள்ளதனால் நாம் அறிஞர்களாகவும் இருந்திருக்கிறோம்.இலக்கியங்கள் உள்ளதை உள்ளபடி கூறுவதுதான், அதனால் அந்த இலக்கியங்களை படைத்திருக்கிறார்கள்.அவர்கள் அறிஞர்களாகத்தான் இருக்க முடியும்.கணணிக்கு ஏற்ற மொழி சிறந்த மொழி தற்காலத்தில் தமிழ் என்ற கருத்து பரவலாகச் சொல்லப்படுகின்றது.

மற்றது மருத்துவம் பல்வகையில் பரந்து கிடக்கிறது.சித்த மருத்துவம், யுனானி என பலவகையில் உள்ளது. அன்மீக ரீதியாக பக்தி இலக்கியங்கள் காணப்படுகின்றது. இவை தமிழில்காணப்படும் வலிமையை காட்டு கின்றது.

அந்த அடிப்படையில் எமது முன்னோரான நாயன் மார்கள் காட்டிய வழியில் எமது தமிழை நாம் வளர்க்க வேண்டும் அதனோடு வாழவேண்டும். பாது காக்க வேண்டும் எனவெல்லாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

எமது பகுதியிலே காணப்படுகின்ற திருக்கோயில் களிலே தமிழ் இல்லாத நிலை இருக்கிறதே? என்பதனை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.இவை எம்மால் ஆக்கப்பட்ட கோயில்களாகும்.63 நாயன்மார்களும் தமிழ் பேசினார்கள் .ஆழ்வார்களும்தமிழ்தான்பேசினார்கள். அவர்களது பாடல்களைப்பாடுகிறோம்.ஆனால் அதனடிப்படையில் செயற்பட மறுக்கின்றோம். எனவே தமிழ் மொழி வழிபாட்டை எமது ஆலயங்களிலே கொண்டு வரவேண்டும்.