பல அரசியல்வாதிகள் தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து நழுவ ஆரம்பித்து விட்டனர்.

0
200

ஆயுத ரீதியான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பல அரசியல்வாதிகள் தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து நழுவ ஆரம்பித்து விட்டதாக வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

அரசு திட்டமிட்டு ஏற்படுத்திவரும் சாதி, சமயப் பிளவுகளுக்குள் சிக்கி சிதறுண்டு போகாமல், தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால் எமது இலட்சியத்தை அடைந்துவிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் நேதாஜி சனசமூக நிலையத்தின் ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சில அரசியல் வாதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து, வதைபட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் புறந்துள்ளி இலங்கைத் தேசியத்துக்குள் கரைய ஆரம்பித்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல், பலர் இலட்சியங்களைக் கைவிட ஆரம்பித்து விட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளதாகவும் பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார்.