எங்களது கலை,கலாசாரம், பண்பாட்டம்சங்கள் பல்வேறு நெருக்கடிகளைச்சந்தித்து வருகின்றது.

0
590

இன்றைய காலகட்டத்தில் தமிழர்களாகிய எங்களது கலை,கலாசாரம், பண்பாட்டம்சங்கள் பல்வேறு நெருக்கடிகளைச்சந்தித்து வருகின்றது. அந்த நெருக்கடிகளில் இருந்து மீள இத்தகைய விழாக்கள் எமக்கு ஒரு வழியாக அமையும் என நான் நம்புகின்றேன்.

என முத்தமிழ் விழாவின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட மூத்த எழுத்தாளரும் திருக்கோணேஸ்வரத்தின் பணிப்பாளர்சபைத்தலைவருமான க.அருள்சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

சம்பூர் தமிழ் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் மூன்று நாட்களாக இவ்விழா நடைபெற்றது. வெள்ளியன்றுமாலை ஆரம்பமான விழாவின் முதல்நாள் நிகழ்வு மன்றத்தின் தலைவர் ,எழுத்தாளர் வைத்தியகலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் தலமையில் சம்பூர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னர் படுகொலையான சம்பூரின் ஆசிரியர் அமரர் மா.கணபதிப்பிள்ளை நினைவாக நடைபெற்ற இந்நிகழ்வில் இயல் அரங்கு முதலில் இடம்பெற்றன.

இங்கு பல இலக்கிய கர்த்தாக்களும் உரையாற்றியிருந்தனர் முதன்மைவிருந்தினர் க.அருள்சுப்பிரமணியம் மேலும்குறிப்பிடுகையில், இந்த சம்பூர் மணணில் தமிழ் ,ஆன்மீகம் என்பன வளர்ந்த இடமாகும். கலை கலாசாரம், பண்பாட்டை வளர்த்த பூர்வீக மண்ணாகும்.

எமது பிரதேசங்களில்குறிப்பாக கிராமங்களில் எமது கலாசாரத்தைப்பண்பாட்டை பிரதிபலிக்கும் பல விடயங்கள் இருந்திருக்கிறது. அவை எல்லாம் பல்வேறு.நெருக்கடிகள், சவால்களுக்குட்பட்டு படிப்படியாக அழிந்து வருகின்றது.

குறிப்பாக தீமிதிப்பு, கும்பவிழா,காவடி, பறையடித்தல் என்பன வெல்லாம் எமது அடையாளங்கள் . இவை யெல்லாம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது. எங்களுடைய கலாசராம் பண்பாட்டு விடயங்கள் முற்காலத்தில் எப்படியெல்லாம் இருந்தது. தற்போது அவை பல்வேறு நெருக்கடிகள் காரணமாக அழிக்கப்பட்ட வண்ணமுள்ளன.

இவ்வாறான நெருக்கடிகளை என்னவிதத்தில் நாம் சமாளிக்கப்போகின்றோம் என்பதற்கு இப்படியான விழாக்கள் அதற்கு வழியாக அமையும்.

எங்களுடைய மக்களுக்கு எமது பழம் பெருமைகளை பற்றி சொல்லி அதனை அவர்கள் உணர்ந்துகொள்ளவும் கடைப்பிடிக்கவும் விழப்பூட்டவேண்டிய கடமை எமக்குள்ளது.

திருகேணேஸ்வரத்தில் தொல்பொருள்கள் திணைக்களத்தின் மூலம் நிகழத்தப்படுகின்ற அநியாயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எமது அரகாமையில் உள்ள சூடைக்குடா மத்தள மலைப்பிரச்சனைகளை நீங்கள் அறிநித்திருப்பீர்கள்.

இப்படி எங்களுக்கு அரசியல் ரீதியாகவும் நிறையப்பிரச்சனைகள் உள்ளன.

நாங்கள் இந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மீழவும் வந்து விட்டோம் என்றிருந்தாலும் கூட எங்களுக்கு நிறையப்பிரச்சனைக்ள தொடர்ந்து இருந்தவண்ணமே உள்ளன.

ஆன்மீக ரீதியாகவும் எமது மக்களின் ஏழ்மை, இடம்பெயர்வு சூழலைப்பயன்படுத்திப ல்வேறு விதமான நெருக்கடிகள் எங்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருக்கின்றன. சமூகத்திலே இன்றைக்கு எமது மக்கள் மிகவும் ஏழ்மையாக இருக்கிறார்கள். அதனால் அவர்களது ஏழ்மையைப்பயன்படுத்தி அவர்களின் அடிப்படை பண்பாடு கலாசாரம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இவ்வாறன விடயங்களையெல்லாம் நாம் எவ்வாறு தடுக்கப்பபோகின்றோம் என்ற கேள்வி எம்முன்னெ உள்ளது.

இதற்குப்பதிலாக சொல்லக்கூடியது, எமது இளைஞர் சமூதாயம் இவ்விடயங்களில் அக்கறை காட்டவேண்டும் என்பதாகும் எம்மைப்போன்றவர்களுக்கு வயதாகிவிட்ட நிலையில் இளைஞர்கள் இதில் அக்கறை செலுத்தவேண்டும்

எங்களுடைய இனத்திற்கும் எமது மதத்திற்கும் ஆன்மீக ம் சார்ந்த நடவடிக்களுக்கும் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதததாக இருக்கின்றது.

இந்த வகையில் தம்பி வைத்தியர் ஸதீஸ்குமார் அவர்களது தலமையிலான இக்குளுவினரின் இந்த முத்தமிழ் விழா முயற்சியானது ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.அவரது முயற்சியை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

முதல் நாள் நிகழ்வில் “வாழும் தமிழ் என்று சங்கே முழங்கு” எனும் தலைப்பிலான கவியரங்கு கவிமணி அ.கௌரிதாசன் தலமையில் இடம்பெற்றது.கவிஞர்களான திருகோணமலை தி.பவித்திரன், கட்டைபறிச்சான் பு ஜெயகரன், சம்பூர் சுஜயந்தன்,ராஜரதன் ஆகியோர் கவிமழை பொழிந்தனர். இறுதியில் “சினமா மக்களை சீரழிக்கின்றதா,சீர்படுத்துகின்றதா” என்ற தலைப்பிலான பட்டிமன்றம் இலக்கியவாதி சேனையூர்இரா. இரத்தினசிங்கம் தலமையில் இடம்பெற்றன.இறுதியில் சினிமா இளைஞர்களை சீரளிக்கின்றது என்ற அணியினர் வெற்றிபெற்றனர் இவ்விழா சுமார் 55 ஆண்டுகளின்பின்னர் இப்பகுதியில் முத்தமிழ்விழாவாக இடம்பெற்றமைகுறிப்பிடத்தக்கது.