இலங்கை வீரர்களுக்கு சூரிச்விமானநிலையத்தில் வாழ்த்து தெரிவித்த முனைப்பு, உதயம் அமைப்பினர்.

0
2814

7 ஆம் திகதி ஏப்பிரல் மாதம் சுவிஸ்லாந்தில் சென்ட் காலன்  (ST.Gallen)நகரில் நடைபெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஓட்டப் போட்டியில் ( Cross Country Championship)   பங்குபற்றிய இலங்கை பல்பலைக்கழக மாணவர்களையும் வழிநடாத்திய  பல்கலைக்கழக இருவிரிவுரையாளர்களையும் சூரிச் விமானநிலையத்தில்  சந்தித்து முனைப்பு,  உதயம் நிருவாகத்தினர் வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர்.

.இன்று காலை (8.4.2018) சூரிச்விமானநிலையத்திற்குச்சென்ற முனைப்பு, உதயம் நிருவாகத்தினர் வீரர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

போட்டியில் கலந்து கொள்வதற்காக   கோவிந்தராஜா கோகுலநாதன் -மட்டக்களப்பு (கிழக்குப்பல்கலைக்கழகம்) மதுசாங் பண்டார- வெலிமடை (ஜெயவர்த்தனபுரபல்கலைக்கழகம்) நளின் பண்டாரவீரசிங்க -கங்குராங்கெத்த (களனி பல்கலைக்கழகம்) சிவகுமார் நிர்மல்- கிளிநொச்சி     (யாழ் பல்கலைக்கழகம் )ஆகிய மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

இவர்களுக்கு வழிகாட்டிகளாக சமரகுமாரகுணவர்த்தன( தலைவர் விளையாட்டுத்துறை களனிபல்கலைக்கழகம்) லலித்றோகன( பணிப்பாளர் விளையாட்டுத்துறை சப்ரகமுவ பல்கலைக்கழகம்) ஆகியோரும் வருகைதந்திருந்தனர்.

உலகத்திலுள்ள பலநாடுகளிருந்தும் தொகையான பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் வடகிழக்கைச்சேர்ந்த இருமாணவர்களும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.