த.ம.வி.பு கட்சியால் வாழைச்சேனைகோறளைப்பற்று பிரதேச சபைக்கு சகோதர இன செயலாளர்?

0
437

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையிலான புரிந்துணர்வு பேச்சுவார்த்தையின் பின்னரே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆதரித்தாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா பிரதேச பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கைப்பற்றுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிப்பதற்கு வழங்கப்பட்ட நிபந்தனைவாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தமிழ் செயலாளரை இடமாற்றி அந்த இடத்திற்கு முஸ்லிம் செயலாளரை நியமிப்பது என்ற அடிப்படையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியதானது முஸ்லிம் காங்கிரஸ் எவ்வளவு தூரநோக்கு சிந்தனையுடையது என்பது புரிகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தங்களுக்கு கிடைத்த விகிதாசார பிரதிநிதித்துவத்தை கொண்டு உப தவிசாளர் பதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்றால் ஏன் வென்று மூன்று உறுப்பினர்களை பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு உப தவிசாளர் பதவியை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

கோறளைப்பற்று மத்திக்கு பிரதேச சபையை பெற்றுக் கொள்ளும் என்ற முனைப்புடன் இருக்கும் சந்தர்ப்பத்தில் உப தவிசாளரை முஸ்லிம் ஒருவர் பெற்றிருந்தால் தமிழ் சகோதரர்கள் நாம் தனியாக பிரதேச சபையை பெற்றுச் செல்வதற்கு உதவியாக இருந்திருப்பார்கள்.

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையை ஆட்சி செய்த போது பிள்ளையானால் ஒரு முஸ்லிம் செயலாளர் நியமிக்கப்படடார். இப்போது மீண்டும் முஸ்லிம் செயலாளரை நியமிக்க கட்சி சம்மதம் வழங்கியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தால் இவர்களுக்கு எதிராக செயற்படுவதாக கூறிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்கின்ற என்பது வேடிக்கை என பிரதேச நலன்விரும்பிகள் கூறுகின்றனர்