இறுதி வலயம் என்ற பெயரை மாற்றியமைத்த மட்டக்களப்பு மேற்கு வலயம்.

0
1743

(படுவான் பாலகன்) 2017ம் ஆண்டிற்கான கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. அப்பெறுபேற்று பகுப்பாய்வுகளின் அடிப்படையில், கல்விப்பொதுத்தராதர உயர்தரத்திற்கு தெரிவானவர்களின் வீதத்திற்கமைய மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 93வது இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளது.

2016ம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சையில், இலங்கையில் உள்ள 98வலயங்களில், 98வது இடத்தினைப்பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், தற்போது இலங்கையில்; உள்ள 99வலயங்களில் 93வது இடத்தினைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை 2016ம் ஆண்டு 39.05 வீத்தினைப்பெற்றிருந்த குறித்த வலயம், 2017ம் ஆண்டு பெறுபேற்றில் 59.76வீதத்தினையும் பெற்றுள்ளது.

பொருளாதாரத்தில் பின்நிலையில் நிற்கின்ற, பெரும்பான்மையாக கூலிவேலை செய்கின்ற குடும்பங்களை கொண்ட, கஸ்ட, அதிகஸ்ட பாடசாலைகளை உடைய வலயமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உள்ளமையும் எடுத்துக்காட்டத்தக்கது. இவ்வாறான பல சவால்களையும் எதிர்கொண்டு மாற்றத்திற்காக உழைத்து நின்ற பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், வலயக்கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மட்டக்களப்பு மேற்கு சமூகத்தினர் நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.