சம்பூர் தமிழ் கலாமன்றத்தின் முத்தமிழ் விழா

0
829

பொன் சற்சிவானந்தம்.

மூதூர் ; பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள சம்பூர் தமிழ் கலாமன்றத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட முத்தமிழ் விழா 3வது நாளான ஞாயிற்றுக்கிழமைமலை இறுதிநாள் நாடக அரங்காக மாலை இடம்பெறுகிறது. கடந்த வெளிளியன்று ஆரம்பமான விழாவின் ஆரம்ப நிகழ்வில் தமிழ் தாய் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கலாசார மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இங்கு மன்றத்தின்தலைவர் வைத்தியகலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் அவர்கள் தலமையுரையாற்றுவதனையும்,திருக்கோணேஸ்வரர் ஆரய அறங்காவலர் சபையின் தலைவர் இலக்கிய கர்த்தா அருள்சுப்பிரமணியம், சைவப்புலவர் செ.வுpபுணசேகரம், எழுத்தாளர் கனகசபை தேவகடாட்சம், கவிஞர் க.கனகசிங்கம் போன்றோர் உரையாற்றுவதனையும் விருந்தினர்கள் தமிழ் தாய் ஊர்வலத்தில் நிற்பதனையும் மண்டபத்தில் விருந்தினர்கள் அமர்ந்திருப்பதனையும் படங்களில் காண்க சுமார் 5 தசாப்தங்களுக்குப்பின்னர் இந்த முத்தமிழ் விழா இப்பகுதியில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.