கல்முனை பிரதிமேயர் தமிழருக்கா? பிறைக்கொடியா புலிக்கொடியா? எமது மக்கள் காத்தமுத்து காங்கிரஸின் அடிமைகளா?

0
949

நற்பிட்டிமுனையில் ஒலித்த வாசகங்கள்

கல்முனை மாநகர சபை பிரதி மேயரை தங்களுக்கு கிடைக்க விடாமல்   தமிழருக்கு ஏன் வழங்கினாய்  எமது மக்கள் காத்தமுத்து காங்கிரஸின் அடிமைகளா என பிரதியமைச்சர் எச் எம் எம்  ஹரீஸ்    மீது  குற்றம் சுமத்தி நற்பிட்டிமுனையில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்று(6)   ஜும்மா தொழுகைக்கு பின்னர் பள்ளிவாசலின் முன்னால் ஒன்று கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பி ஊர்வலமாக நற்பிட்டிமுனை பிரதான வீதியை சென்றடைந்தனர்.

பிறைக்கொடியா புலிக்கொடியா என்றவாசகமும் பொறிக்கப்பட்ட சுலோக அட்டையை ஆர்ப்பாட்க்காரர்கள் ஏந்தியிருந்ததையும் அவதானிக்க முடிந்ததது