மட்டக்களப்பு மாநகர முதல்வர் சர்வமதத் தலைவர்கள் மற்றும் அரச அதிபரைச் சந்தித்தார்

0
695

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய மாநகர சபை முதல்வர் இன்றைய தினம் (06) சர்வமத தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை, கல்லடி இராமகிருஸ்ணமிசன் சுவாமிஜீ பிரபு பிரேமானந்தா, மட்டக்களப்பு ஜமியுசலாம் பள்ளிவாசல் மௌலவி நியாஸ் அகமட், மங்களராம விகாரையின் உதவி விகாராதிபதி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடி, அவர்களிடம் ஆசிபெற்றுக் கொண்டார்.

இதன் போது மாநகரசபை உதவி மேயர் கா.சத்தியசீலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன், யூ.பிலிப், ச.இ.சந்திரகுமார், து.மதன், பு.ரூபராஜ், அ.கிருரஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இறுதியில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.