மட்டு. மேயர் பிரதி மேயர் மற்றும் உறுப்பினர்கள் மட்டு ஆயரிடம் ஆசி பெற்றனர்.

0
387

மட்டக்களப்பு மாநநகர சபையின் புதிய மேயராகத் தெரிவு செய்யப்பட்ட மேயர் சரவணபவன், பிரதி மேயர் சத்தியசீலன் மற்றும் உறுப்பினர்கள் மதத் தலைவர்களின் ஆசி பெற்றுக் கொள்ளும் முகமாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரை வெள்ளிக்கிழமை காலை சந்தித்து ஆசி பெற்றனர்.

அத்துடன், மாநகர சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

இதன் போது கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா,

நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நல்லதொரு செய்தி கிடைத்து. மட்டக்களப்பு மாநகர சபைக்கு மேயராக சரவணபவன் தெரிவு செய்யப்பட்டது மகிழ்ச்சியான செய்தியாகும். இன்று அவரும் அவரது குழுவினரும் என்னை வந்து சந்தித்தார்கள். அவர்களை வாழ்த்தினேன் வரவேற்றேன்.

இளம் இரத்தம் எப்பொழுதும் மக்களுக்கு நல்லதைச் செய்து கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது. அவர்களிடம் நான் கேட்டுக் கொண்டது மட்டக்களப்பு நகரம் பின்தங்கியுள்ளது அதனை முன்னுக்குக் கொண்டுவருவது உங்களுடைய காலத்தக்கானதாக இருக்கிறது.

கடவுள் நல்லதொரு வாய்ப்பைத் தந்திருக்கிறார். எல்லோரும் இணைந்து மக்களுக்கு பணியாறலாம். முன்னுக்குக் கொண்டுவரலாம் நீர் வளமும் நில வளமும் கொண்டு இந்த மீன் பாடும் தேன்நாட்டில் எவ்வளவு நல்ல காரியங்களைச் செய்யலாம். மற்ற நகரங்களைப் போலவே இந்த நகரத்தினையும் மாற்றலாம் என்பது உங்கள் கையில் உள்ளது என்று வாழ்த்தினேன்.

இது போன்ற நிகழ்வுகள் எப்போதும் நடக்க வேண்டும் அப்போதுதான் எம் மக்களுடைய வரட்சி மனப்பான்மை நீங்கி அனைவரும் புது உத்வேகத்துடன் பணியாற்றுவர்கள் என்ற நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.