வாழைச்சேனை சபையை இழந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு T.M.V.P சோபா ஜெயரஞ்சித் தவிசாளர்

0
820

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெற்றதுடன், உப தவிசாளர் பதவியை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பெற்றுக் கொண்டது.

மட்டக்களப்பு கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு வெள்ளிக்கிழமை  கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது. வட்டார அடிப்படையில் 14 பேரும் விகிதாசார அடிப்படையில் 9 பேருமாக 23 பேர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் 6 பேரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் 2 பேரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 6 பேரும், தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 3 பேரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ 3 பேரும்;, நல்லாட்சிகான மக்கள் முன்னணி சார்பில் ஒருவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், கருணா அம்மானின் சுயேட்சைக் குழு சார்பில்; சார்பில் ஒருவரும் தெரிவாகியிருந்தனர்.

தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் தெரிவுக்கான திறந்த வாக்கெடுப்பினை மேற்கொள்வது என உறுப்பினர்களினால் தீர்மானிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக சோபா ஜெயரஞ்சித் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கிருஸ்பிள்ளை சேயோன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதையடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து சோபா ஜெயரஞ்சித் 12 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். எதிர்த்து போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கிருஸ்பிள்ளை சேயோன் 09 வாக்குகளையும் பெற்றனர் இதில் நல்லாட்சிகான மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

உதவித் தவிசாளர் தெரிவிற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கனகரெட்னம் கமலநேசன் மற்றும்; ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் தர்மலிங்கம் யசோதரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் தர்மலிங்கம் யசோதரன் 12 வாக்குகளைப் பெற்று உதவித் தவிசாளரா தெரிவு செய்யப்பட்டார். எதிர்த்து போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கனகரெட்னம் கமலநேசன் 09 வாக்குகளையும் பெற்றனர் இதில் நல்லாட்சிகான மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

வாக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து சோபா ஜெயரஞ்சித் தவிசாளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் தர்மலிங்கம் யசோதரன்; உதவித் தவிசாளராகவும் பகிரங்க வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் கருணா அம்மானின் சுயேட்சைக் குழு ஆகியன ஆதரவளித்திருந்தது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தனர்.