கொக்கட்டிச்சோலையில் மண்முனை தென்மேற்கு கோட்ட தமிழ்தினப்போட்டிகள்.

0
396

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தமிழ்தினப் போட்டிகள் இன்று(05) வியாழக்கிழமை கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் இடம்பெற்றன.

கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தலைமையில் நடைபெற்ற போட்டி நிகழ்வில், வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரது சிலைக்கு உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மலர்மாலை அணிவித்தும் மலர்தூபியும் வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, போட்டிகள் ஆரம்பமாகின.

இதன் போது, வாசிப்பு, ஆக்கத்திறன் வெளிப்பாடு, பேச்சு, பாவோதல், இசையும், அசைவும், இசை, நடனம், நாடகம் போன்ற போட்டிகளும் இடம்பெற்றன.