மட்டக்களப்பு மாநகரசபையின் 14,வது முதல்வராக சரவணபவான் தெரிவு வீடியோ படங்கள்

0
765

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் தி.சரவணபவன் அவர்கள் சற்று முன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆதரவாக தி.சரவணபவனுக்கு 25 வாக்குகளும் எதிராக போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் சோமசுந்தரத்திற்கு 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன 2 பேர் வாக்களிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தனர்.

பிரதிமுதல்வர் கௌரவ கந்தசாமி சத்தியசீலன் தெரிவானார்

மட்டக்களப்பு மாநகரசபையின் 14,வது முதல்வர் கௌரவ சரவணபவான் என்பது குறிப்பிடத்தக்கது

அதன் பின் உப தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கந்தசாமி சத்தியசீலன் ஐக்கிய தேசிய கட்சியின் தெய்வநாயகம் சிவலிங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் தீபன் ராஜன் ஆகியோர் போட்டியிட்டதில் சத்தியசீலன் 24 வாக்குகளையும் சிவலிங்கம் 10 வாக்குகளையும் தீபன்ராஜன் 3 வாக்குகளையும் பெற்றனர்.
இதன் படி சத்திய சீலன் அவர்கள் மற்றய இருவரையும் விட 11 வாக்குகள் மேலதிகமாக பெற்று மட்டக்களப்பு மாநகரின் பிரதி முதல்வராக தெரிவுசெய்யபட்டார். பாரிய எதிர் பார்ப்புடன் இருந்த மட்டக்களப்பு மாநகர சபை அமோக வெற்றியிட்டியது தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமாகியது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/thananjeyan6/videos/10213849758775894/