மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளராக சோமசுந்தரம் மகேந்திரலிங்கம்கூட்டமைப்புக்கு பிரதித்தவிசாளர்.

0
402

ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளராக சுயேட்சைக் குழுவில் (கூடாரம்) போட்டியிட்ட சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் தெரிவு செய்யப்பட்டார்

இன்று(4) காலை ஆரம்பிக்கப்பட்ட மண்முனைப் பற்று பிரதேச சபைக்கான முதல் அமர்வில் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் தவிசாளராக ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தவிசாளராகவும், உதவித் தவிசாளராக தழித் தேசியக் கூட்டமைப்பில் கிரான்குளத்தில் போட்டியிட்ட மாசிலாமணி சுந்தரலிங்கம் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இவ் அமர்வில் தவிசாளருக்கான போட்டியில் தமித் தேசியக் கூட்டமைப்பின் ஆரையம்பதி வேட்பாளர் செல்லத்துரை மாணிக்கராசா மற்றும் சுயேட்சைக் குழு – 1 ல் போட்டியிட்ட வேட்பாளர் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் ஆகியோர் களமிறங்கினர்.

17 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இதன் வாக்கெடுப்பு முடிவில் 2 உறுப்பினர்கள் நடுநிலமை வகிக்க செல்லத்துரை மாணிக்கராசா 7 வாக்குகளையும் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் 8 வாக்குகளையும் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.