பட்டிப்பளையின் தவிசாளராக புஸ்பலிங்கம்.கைகொடுத்தார் கருணா அம்மான்.

0
1322

பட்டிப்பளை பிரதேசசபையின் தலைவராக அரசடித்தீவைச்சேர்ந்த சின்னத்துரை புஸ்பலிங்கமும்  உபதவிசாளரா  முதலைக்குடாவைச்சேர்ந்த கோபாலபிள்ளையும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9மணிக்கு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற சபையின் முதலாவது அமர்விலே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.

16உறுப்பினர்கள் கலந்து கொண்ட இவ் அமர்வில் தமிழ்தேசியகூட்டமைப்பின்7 உறுப்பினர்களுடன் கருணா அம்மானின் கட்சியைச்சார்ந்த 1 உறுப்பினரும் என 8 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

கூட்டமைப்புக்கு எதிராக தமிழர்விடுதலைக்கூட்டணி ஜக்கியதேசியக்கட்சி 2பேர் தமிழ்மக்கள்விடுதலைப்புலிகள் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும் எதிர்த்து வாக்களித்தனர்.

கருணா அம்மானின் கட்சியின் வாக்கினாலும் யு.என்.பி.ஒரு உறுப்பினரின் நடுநிலைமையினாலும் மேலதிக ஒரு வாக்கினால்  தவிசாளர் தெரிவும் உதவித்தவிசாளர் தெரிவும்  இடம்பெற்றுள்ளது.