மூதூரில் எட்டாவது வருடாந்த வேள்வியும் 3வது பௌர்ணமி பொங்கல் விழாவும்

0
414

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள பாட்டாளிபுரம் இளைஞர் வளநிலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் எட்டாவது வருடாந்த வேள்வியும் 3வது பௌர்ணமி பொங்கல் விழாவும் சிறப்பாக அண்மையில் நடைபெற்றது.

இதனைமுன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் மது பாவனையைதடைசெய்தல் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழித்தல், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதன்பின்னர் பாட்டாளிபுரம் நீலாக்கேணி போன்ற கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான தலமைத்துவப்பயிற்சியும் கலந்துரையாடலும் இருநாட்கள் இடம்பெற்றன.இந்நிகழ்வில் மட்டக்களப்பில் இருந்து வந்து கலந்துகொண்ட நிசாந்தன் தலமையிலான வளவாளர்கள் கலந்துகொண்டு இளைஞர்களை விழிப்பூட்டினர்.ஆரம்ப நிகழ்வில் இளைஞர்அபிவிருத்தியகத்தின அகஉதய திட்ட பொறுப்பாளரும் பிரதி இணைப்பாளருமான பொ.சற்சிவானந்தம், மூதூர் இந்து இளைஞர் மன்ற செயலாளர் க.த.பொள்னுத்துரை,இந்துசேவா அமைப்பின் பிரதிநிதி க.ரதீஸ்வரன்உள்ளிட்ட பலரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்
வேள்வியன்று இரவு மக்களை தெளிவூட்டும் அன்மீக பொது நிகழ்வு இளைஞர் குளுத்தலைவர் தர்சன்தலைமையில் வளாக மண்டபத்தில் இடம்பெற்றன.இந்நிகழ்வில் மாவட்ட விவசாயசங்கத்தின் தலைவர்.மாவட்ட அமையத்தின் தலைவர். உதவிக்கல்வி ப்பணிப்பாளர் பு.கருணாகரன்,பாட்டாளிபுரம் மாதர்குளுத்தலைவி புனிதம் உள்ளிட்ட அதிகளவிலானோர் பங்குகொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் பாட்டாளிபுரம் வீரமாகாளி அம்பாள் ஆலய நெறிப்படுத்தினார் பொன்னாடைபோரத்தி கௌரவிக்கப்பட்டார். ஆலயத்தை சிறப்பாக நடாத்திவருவதனால் இக்கௌரவிப்பு வழங்கப்பட்டன. இளைஞர்களுக்கு ஆன்மீக உடையான வேட்டியும் வழங்கப்பட்டன.மாலைகட்டும்பொட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

மாலையில் வேள்விக்கான மடைப்பெட்டி பாட்டாளிபுரம் விநாயகர்ஆலயத்தில் நடந்தபூஜையின் பின்னர் அம்பாள் ஆலயத்திற்கு பக்திபூர்வமாக எடுத்துவரப்பட்டன.
மறுநாள் விஷேடபொங்கல் பூஜைகள்,உடுக்கு வாத்திய கச்சேரி,பிரர்த்தனைகள் என்பன இடம்பெற்று அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.வருகைதந்த அடியார்கள் அனைவரும் அம்பாளுக்கு பூபோட்டு வணங்கியமை சிறப்பு அம்சமாகும்