கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இடைக்கால நிர்வாகம் தெரிவு. மட்டுத்தலைவராகபேராசிரியர். மா.செல்வராசா

0
571

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்த பொதுக்கூட்டத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இடைகால நிர்வாகம் தெரிவானதாக அவ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்; அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள துளசி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத் தெரிவுகள் நடைபெற்றதாகவும் இதுவரை இயங்கிய இணைப்பாளர்ளான சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன் மற்றும் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்; ஆகிய இருவருக்கும் மேலதிகமாகத் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பூ.உகநாதன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றார். அத்துடன் பின்வரும் மாவட்டக்குழுப் பதவியாளர்களும் தெரிவாகினர் என்றும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திற்கென முறையே தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைச் செயலாளர்களாக கோ.வீரசிங்கம், கலாநிதி கோ.சற்குணலிங்கம், தி.ஹரிஸ்ரன் , சு.இராஜதுரை , சி.ரவீந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கென முறையே தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைச் செயலாளர்களாக பேராசிரியர். மா.செல்வராசா பொறியியலாளர் வ.பரமகுருநாதன், ச.சிவயோகநாதன் , கலாநிதி க..அருளானந்தம், சா.திருநாவுக்கரசு ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திற்கென முறையே தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைச் செயலாளர்களாக இரா.நடராசா, பொ.நடராஜசிவம், கி.ஜெகதீஸ்வரன் , ப.நேசராசா, ஆர்.சதீஸ்காந் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

அந்தந்த மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப் பெற்றனர்

இணைப்பாளர்களும் மாவட்டக் குழுக்களும் இணைந்ததான ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு கிழக்குத் தமிழர் ஒன்றியத்திற்கு ஏற்படுத்தப்பெற்றுள்ளதாகக் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இணைப்பாளர்களுடன் மாவட்டக் குழுக்கள் இணைந்து பிரதேச செயலாளர் பிரிவு மட்டக் கட்டமைப்புகளை எதிர்காலத்தில் ஏற்படுத்துவதுடன் கிராம சேவகர் பிரிவு மட்டக் குழுக்களும் உருவாக்கம் பெற்று இணைப்பாளர்கள் மாவட்டக் கட்டமைப்புகள் பிரதேசயெலாளர் பிரிவு மட்டக் கட்டமைப்புகள் கிராம சேவகர் பிரிவு மட்டக் குழுக்கள் எனத் தொடுக்கப்பெற்ற வலைப்பின்னல் ஊடாகக் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் விபரம் கூறுகையில், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் உத்தேச வேலைத்திட்ட வரைபும் இக்கூட்டத்தில் இறுதிப்படுத்தப்பெற்று அங்கீகரிக்கப் பெற்றுள்ளதாகவும் இது அச்சிடப்பெற்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும், மாவட்டக் குழுக்கள் வினைத்திறனுடன் செயலாற்றுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்திலுள்ள துறைசார் நிபுணர்கள் மற்றும் தொழில்வாண்மையாளர்களை உள்ளடக்கிய ‘வழிகாட்டல் குழு’(ளுவசைசiபெ ஊழஅஅவைவநந) க்கள் ஏற்படுத்தப் பெற்றுச் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் உடனடியான செயற்பாடு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில் அதிஉச்ச பட்ச ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச் சின்னத்தில் கீழ் ஒன்றிணைத்து ஒரே அணியில் போட்டியிட வைப்பதற்காக மக்களைத் தயார்ப்படுத்தல் ஆகும் எனவும் இணைப்பாளர்கள் மூவரும் கூட்டாகத் தெரிவித்தனர்.