உலகின் முதல் தமிழ் பேராசிரியர்சுவாமி விபுலானந்தருக்கு சுவிஸ்லாந்தில் விழா.

0
336

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 125வது ஆண்டு விழா சுவிஸ்லாந்து நாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை 07.04.2018  இல் நடைபெறவுள்ளது.

Olten  நகரில் அமைந்துள்ள Kirch Trimbach,  Chappeligass 39, 4632 Trimbach, Olten  எனும் இடத்தில் மதியம் 12.00மணிமுதல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

சுவிஸ்வாழ் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அரங்கில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன், அரங்கம் வழங்கும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வெளியீடு  இடம்பெறவுள்ளதுடன் „தீர்த்தக்கரையினிலே“ மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் கானங்கள் இசைத்தட்டு அறிமுகமும் இடம்பெறவுள்ளது.

சுவிஸ்நாட்டில் விபுலானந்தருக்கு முதல் முறையாக நடைபெறும் விழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.