நாவிதன்வெளிபிரதேசசபை மீண்டும் த..தே.கூட்டமைப்பு வசம்! தவிசாளராக கலையரசன்

0
208
உபதவிசாளராக சமட் தெரிவு!
காரைதீவு   சகா
 
நாவிதன்வெளிப்பிரதேசசபையின் தவிசாளராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தவராசா கலையரசன் மீண்டும் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
உப தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச்சேர்ந்த எ.சமட் போட்டியின்றி தெரிவாகியுள்ளார். 
 
இச்சபைக்கான முதல் அமர்2) திங்கட்கிழமை காலை 9.30மணிக்கு நாவிதன்வெளிபிரதேசசபை சபாமண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.
 
தவைசாளருக்கு த.கலையரசன் எ.ஆனந்தன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன. வாக்கெடுப்பின்போது கலையரசனுக்கு  8 வாக்குகளும் ஆனந்தனுக்கு 4வாக்குகளும் கிடைத்தது.
 
அதன்படி தவராசா கலையரசன் தவிசாளரானார். இவர் ஏலவே நாவிதன்வெளிப்பிரதேசசபையின் தவிசாளராகவும் கிழக்குமாகணசபையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தவர்.
 
உபதவிசாளர் தெரிவுக்கு சமட்டின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டதனால் அவர் போட்டியின்றி உப தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டர்.
சபையில் 13உறுப்பினர்கள். இருந்தபோதிலும் ஒருவர் அமர்வில் கலந்துகொள்ளவில்லையென்பது