நாடகம் மனித உணர்வை சமுகங்களிடையே கொண்டு சேர்க்கின்றது.

0
636

தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்ப்பது இயல் இசை நாடகமாகும். இயல் தமிழ் இலக்கணத்துடன் கூடியது. இசை தமிழிசையுடன் இணைந்தது. நாடகம் தமிழ்க்கதை, கூத்து ஆகியவற்றுடன் இணைந்து. நாடக கலைக்கு சிறப்பான இடம் மக்கள் மத்தியில் இருந்து வருவதை காணலாம்; அரங்கிற்க்கும் மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு உள்ளது. மக்கள் மத்தியில் உள்ள பிறச்சினைகளை இனம் கண்டு அவர்கள் முன் கொண்டு சென்று மக்கள்; மூலமாக தீர்வினை பெறச்செய்யும் கலை வடிவம்தான் நாடகம். இதனால் தான் நாடகம் ஒரு சமுகத்திற்கு மட்டும் உரித்துடைய கலை வடிவம் அல்லாமல் அது ஒட்டுமொத்த சமுகத்திற்குமான கலைவடிமாக காணப்படுகின்றது. பொதுவாகவே அவைக்காற்றுகைகலைகள் கருத்துப் பறிமாற்ற ஆக்கத்திறனை கொண்டு வருவது, பல குழுக்களுடன் ஆரேக்கியமான தொடர்புகளை ஏற்படுத்துவது, சிறந்த ஊடகமாகவும் படைப்பாளர்களின் கருத்துக்களை சுகந்திரமாக வெளிப்படுத்தக் கூடிய வகையில் காணப்படுவதினால் ஆற்றுகைக்கலைகளுக்கு அன்று தொடக்கம் இன்று வரை மக்கள் மத்தயில் சிறப்பான ஒரு இடம் இருக்கின்றது.

உலக நாடக தினம் பற்றி நோக்குகின்ற போது ஓவ்வொரு வருடமும் மார்ச் 27ம் திகதி உலக நாடக தினம் கொண்டாடப்படுகின்றது. இந் நாளில் உலகில் பல நாடுகளில் நடனம் நாடகம் போன்ற ஆற்றுகைக்கலைகள் நிகழ்த்துகை செய்யப்படுகின்றன. நாடக தினம் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்றால் சர்வதேச அரங்க பயிலகம் என்ற அமைப்பு யுனைஸ்கோவுடன் இணைந்து உலகிலுள்ள முன்னணி அரங்க வல்லுனர்களால் ஆற்றுகை கலைத்துறையில் ஈடுபடுவோர்களின் படைப்பாற்றல் கலைகளை ஊக்குவிக்கும் முகமாக 1948ம் ஆண்டு பாரிஸில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த உலக நாடக தினம். பாரிஸில் தொடங்கிய (வாநயவசந ழக யெவழையெட்) திருவிழாவை நினைவு கூறும் வகையில் அந்த தினத்தையே உலக அரங்க தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அன்றைய தி;னத்தில் பாரம்பரிய கலை வடிவங்களை அழியாது பாதுகாத்தல் என்பது மட்டுமின்றி அரங்க கலைகளை கௌரவப்படுத்தவும் அரங்க கலைகள் ஊடாக மக்களை மகிழ்ச்சி படுத்துவதுமாக இந்த உலக நாடக தினம் கொண்டுவரப்பட்டது.

இந்த உலக நாடக தினத்தில் பல்வேறு அரங்க கலைஞர்களால் பல வகையான ஆற்றுகைகள் நிகழ்த்தப்படுகின்றன. நாடகம், நாட்டியம், இசைநாடகம், கூத்து, தெருக்கூத்து என ஆற்றுகைகள் நிகழ்த்துவதுடன் பாரம்பரியமான கலை வடிவங்களும் நிகழ்த்துகை செய்யப்படுகின்றன. இவ்வாறான ஆற்றுகை கலைகள் நிழத்துவதுக்குரிய மிக முக்கியமான நோக்கம் ஆற்றுகைகலைகளின் முக்கியத்துவமும் அதனை மீண்டும் ஒரு புதிய படைப்பாக மிளிற செய்தல், இதனுடாக கலைஞர்களுக்கான கௌரவத்தை வழங்குதல் மறு;றும் மக்களை மகிழ்ச்சியில் வழிநடத்துவதற்கான ஒரு வழிமுறையை உருவாக்குவதுமாகும். படைப்பாளிகளுக்கு தமது படைப்பினை படைத்த சந்தோசமும் பார்வையாளர்களுக்கு பார்வையிட்ட சந்தோசமும் இதனுடாக கிடைக்கின்றது.

இதனால் தான் நாடக கலையானது சிறப்பு மிக்க கலை வடிவமாக காணப்படுகிறது. அக்காலத்தை படம் பிடித்து காட்டும் காலக்கண்ணாடியாக நாடகம் விளங்குகின்றன. சமுகத்திற்கு தேவையான விழிப்புணர்வு செயற்பாடுகளையும் மகிழ்ச்சி படுத்துதல் செயற்பாட்டையும் மனிதரை மனித நிலையில் செயற்படவைப்பதும் நாடகமே. நாடகம் மக்களுடன் ஆற்றுகை நிலையில் நேரடி தொடர்பினை கொண்டுள்ளமையினால் உடன் விமர்சனத்தை எதிர் கொண்டு மக்களை வழிநடத்துவதற்கான ஒரு கலை வடிவமாக நாடகம் காணப்படுகின்றது. சக்தி மிக்க நாடக கலையை நினைவுக்கு கொண்டு வரவேண்டும.; எனும் நோக்குடன் உருவாக்கபட்டதுதான் உலக நாடக தினம.; இவ் தினத்தின் உலககெங்கிலும் உள்ள அரங்க கலைஞர்களாலும் அரங்க ஆர்வலர்களாலும் ஆற்றுகை குளுக்களாலும் பல்கலைகழகங்களிலும் ஆற்றுகை சார் நிறுவகங்களிலும் இவ் உலக நாடக தினமானது கொண்டாடப்படுகின்றது. மூன்று நாட்கள் அல்லது ஒரு கிழமை அல்லது ஒருமாதமும் நிகழ்ச்சிகள் ஒழுங்கமைப்பு செய்யப்படுகின்றன.

உலக நாடக தினமானது எமது நாட்டிலும் சிறப்பான முறையில் பல ஆண்டுகளாக கொண்டாடப்படுகின்றது. இவை பல்வேறு வடிவங்களின் நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்கள் செய்யப்படுகின்றது. அன்றைய தினத்தில் நாடகத்துறையில் சிறந்து விளங்கிய ஒருவரைப்பற்றிய கலந்துரையாடல்கள் அல்லது புதிய அரங்க வடிவங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் புதிய புதிய நாடகங்களின் அரங்கேற்றங்கள் உலக பிரசித்தி பெற்ற நாடக ஆசிரியர்களின் நாடக எழுத்துருக்கள் நாடகமாக அரங்கேற்றப்படல் சிறுவர் நாடகங்கள் வடமோடி தென்மோடி கூத்துக்கள் வசந்தன் கூத்துக்கள் போன்றனவும் ஆற்றுகை செய்யப்படுவதோடு பாரம்பரியமான நாடகம் சார் உடைகள் காட்சி பொருட்கள் அலங்காரப் பொருட்கள் போன்றவற்றின் காட்சி படுத்தல்களும் அன்றைய நாளில் நிகழ்த்தப்படுகின்றன.

இவை மட்டுமின்றி நாடகத்துறையில் சிறந்து விளங்கிய நாடக கலைஞர்கள் அண்ணாவி மார்களுக்கும் கௌரவங்கள் வழங்கப்படுகின்றன. தழிழர்களின் பாரம்பரியமான இசை வாத்தியங்களுடன் தொடங்குகின்ற உலக நாடக தினமானது சிறப்பு மிக்க தினமாக கொண்டாடப்படுகின்றது. நாடகம் தான் மனித உணர்வை சமுகங்களிடையே கொண்டு சேர்க்கின்றது. மக்களை நெறிப்படுத்தும் விடயங்களை கொண்டு சேர்க்கவும் சமுக விழிப்புணர்வையும் சமுகக்கட்டமைப்பையும் நிர்ணையிக்க நாடகங்களே அவசியமாகின்றன. ஆயினும் இன்றைய நவீன காலணித்துவ சூழலில் நாடகக் கலையானது பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டும் செல்கின்றது. ஆகவே அரங்க கலைஞர்களை ஊக்கப்படுத்தி மகிழ்விப்போம் உலக அரங்க தின வாழ்த்துக்கள்.

பொன்.சுரேந்திரன்
உதவி போதனாசிரியர்
கிழக்குப் பல்கலைக்கழகம்.