கொக்கட்டிச்சோலையில் குதூகல விளையாட்டு.

0
821

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா பாலர் பாடசாலை மாணவர்களின் குதூகல விளையாட்டு நிகழ்வுகள் கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நேற்று(31) மாலை இடம்பெற்றன.

இங்கு, நிறக்கொடி தெரிதல், பழம் பொறுக்குதல், சாக்கு ஓட்டம், போத்தலில் நீர் நிரப்புதல் போன்ற போட்டி நிகழ்வுகளும், அணிநடை மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதன் போது, போட்டியில் கலந்து கொண்ட அனைத்மு மாணவர்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.