40வருடங்களின் பின் படையாண்டவெளியில் வாழவீமன் கூத்து அரங்கேற்றம்.

0
1316

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, படையாண்டவெளி மாருதம் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் வாழவீமன் கூத்து நேற்று(31) இரவு படையாண்டவெளி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய முன்றலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

40வருடத்திற்கு முன்பு இப்பகுதி கலைஞர்களினால் ஆற்றுகை செய்யப்பட்ட இக்கூத்தானது, மீண்டும் நாற்பது வருடங்களின் பின்பு ஆற்றுகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.