கார் வாங்கியமைக்கு விருந்து இளைஞன் பரிதாபச்சாவு.

0
381

ஹோட்டல் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் வில்பிரட் நகரை சேர்ந்த 26 வயதுடைய சம்பந்தன் பிரேம்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனியார் வங்கியொன்றில் கடமையாற்றும் குறித்த இளைஞன் கார் ஒன்று வாங்கியமைக்கு சக நண்பர்களுக்கு கடந்த 26 ஆம் திகதி லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியிலுள்ள ஹோட்டலில் விருந்து வழங்கிய சந்தர்ப்பத்தில் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்த நிலையில் லக்ஷபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (01) உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தனர்.