ஆரையம்பதியில் சிறப்பாக நடைபெற்றவிக்கிபீடியா நிறுவனத்தின்பயிற்சிப்பட்டறை

0
462
விக்கிபீடியா நிறுவனம் மற்றும் நுாலகம் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் “வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் காணப்படும் பாரம்பரிய கைத்தொழில்களை பால்லுாடக ஆவணப்படுத்தல்” நிகழ்ச்சிதி்ட்டத்தின் ஒரு அம்சமாக, மட்டக்களப்பில் விக்கி – நுாலக அறிமுகம் மற்றும் ஆவணப்படுத்தல் வேலைத்திட்ட முன்னெடுப்பு போன்றவற்றை நோக்காக கொண்டு 31.03.2018 அன்று ஆரையம்பதி, கோயில்குளத்தில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப நிறுவகத்தின் கணனி ஆய்வு கூடத்தில் பயிற்சிப்பட்டறை ஒன்று இடம்பெற்றது.
நுாலக நிறுவன தன்னாவலர் திரு.சொ.பிரசாத் தலைமையில் ஆரம்பமாக இப்பட்டறையில் மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.செ.ஜெயபாலன் அவர்கள் அதீதியாக கலந்து கொண்டு பட்டறையினை தொடங்கிவைத்தார்.
இப்பட்டறையில், ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமையும் விக்கிபீடியா-தமிழின் ஆரம்ப கர்த்தாவான திரு.மயுரநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்து கருத்துரையாற்றியதுடன் இவ் நிகழ்வில் திரு.ச.சிவகுமார், வி.துலாஞ்சன், திரு.சொ.பிரசாத் அவர்களும் வளவாளர்களான கந்து கொண்டனர்.
மட்டக்களப்பின் பல்வேறு துறையை சேர்ந்த இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், பல்கலைகழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பங்கேற்பாளர்களின் கலந்துகொண்டதுடன் விக்கி – நுாலகம் – ஆவணப்படுத்தல் என்பவை சார்ந்த கருத்துப்பகிர்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.