மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 36 உள்ளுராட்சி மன்ற உற்ப்பினர்கள் சத்திய பிரமாணம்!

0
897
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் சனிக்கிழமை 31ஆம் திகதி நடைபெற்றது.

 
கிழக்கு மாகாண ஆளுனர்  ரோஹித்த போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொணட இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தின் 11 உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த 36 உறுப்பினர்களுக்கு இதன்போது சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன் அதன் பிரதியினையும் பெற்றுக்கொண்டனர்.
 
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண  முதலமைச்சின் செயலாளர் யூ எல் ஏ அசீஸ், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.சலீம், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் கே.சித்திரவேல், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பிரதித் தலைவர் நா.திரவியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.