மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 89பேர் உயர்தரம் படிக்க தகுதி பெற்றுள்ளார்கள்

0
673

(க.விஜயரெத்தினம்)
கடந்த வருடம் நடைபெற்று தற்போது வெளியாகியுள்ள க.பொ.த.சாதரணப் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் சார்பாக பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 89 மாணவர்கள் உயர்தரம் படிக்க தகுதி பெற்றுள்ளதாக மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இராசதுரை-பாஸ்கர் தெரிவித்தார்.பரீட்சை சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

மட்டக்களப்பு நகர்புறத்தில் உள்ள தேசியபாடசாலைகளின் பெறுபேறுகளைவிட மாகாணப்பாடசாலையாக திகழும் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் க.பொ.சாதரணப் பெறுபேறுகள் முதன்மையாகவுள்ளது.இதேவேளை மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் காணப்படும் மாகாணப் பாடசாலைகளின் பெறுபேறுகளைவிட மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பெறுபேறுகள் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இப்பாடசாலைகளில் தோற்றிய மாணவர்களில் 9A சித்திகளை 8பேரும்,8AB சித்திகளை 3பேரும்,8AC சித்தியை ஒருவரும்,7A2B ஆறுபேர் அடங்கலாக 89 பேர் உயர்தரம் படிக்க தகுதிபெற்றுள்ளார்கள்.மாணவர்களின் பெறுபேறுகள் அதிகரித்தவளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்த வகுப்பாசிரியர்கள்,ஆசிரியர்கள்,முன்னாள் அதிபர்,பாடசாலை பழைய மாணவசங்கம்,அபிவிருத்தி சங்கம் அனைவருக்கும் நான் தனிப்பட்ட வகையில் நன்றிகளையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்