கல்குடாவில் புத்தகப்பைகள் வழங்கிய சீனர்கள்

0
329

இலங்கை ரவல்ஸ் ரென்ட்ஸ் லெசர் நிறுவனமும் (Travel Trends Leisure) சீனா டியூ ரவல்ஸ் (Diyu Travel) நிறுவனமும் இணைந்து சுற்றுலா மையத்தை கொண்ட பகுதியிலுள்ள வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் கிறோவ் (GROW) என்ற தொனிப்பொருளில் வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் பாசிக்குடா த ஹாம் ஹோட்டல் முகாமையாளரின் வேண்டுகோளுக்கிணங்க வாழைச்சேனை கருங்காலிச்சோலை ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் நேற்று வியாழக்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டது.

பாசிக்குடா த ஹாம் ஹோட்டல் முகாமையாளர் சுசந்த பன்டார தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை அதிபர் திருமதி.எஸ்.சந்திரபால, சீனா நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இருபது பேர் அடங்கிய குழுவினர்கள், பாசிக்குடா த ஹாம் ஹோட்டல் மனிதவள முகாமையாளர் க.கார்த்தீபன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலையில் மிகவும் வறிய மாணவர்கள் இருபது பேருக்கு சீனா நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த குழுவினர்களால் புத்தகப் பைகள் மற்றும் இனிப்பு பண்டங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கல்குடாப் பிரதேசத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களை இணங்கண்டு தொடர்ச்சியாக இவ்வாறான உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளது.

சீன சந்தையில் முக்கிய சுற்றுலா நிறுவனமாக திகழும் ரவல்ஸ் ரென்ட்ஸ் லெசர் (வுசயஎநட வுசநனௌ டுநளைரசந) தனியார் நிறுவனம் அதன் சீன பங்குதாரரான டியூ ரவல்ஸ் (னுலைர வுசயஎநட) உடன் இணைந்து கிறோவ் “புசுழுறு” என்ற சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து சேவைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதுவரையில் தம்புள்ளை, சிகிரியா, வென்தோட, பாசிக்குடா போன்ற சுற்றாலா பகுதிகளிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வறிய மாணவர்களுக்கு பாடசாலை பைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது என ரவல்ஸ் ரென்ட்ஸ் லெசர் நிறுவன தலைவர் லஹிரு வீரவர்த்தன தெரிவித்தார்.