3766 ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான கடிதங்கள் அனுப்பியது கல்வியமைச்சு.

0
451

நாடு முழுவதுமுள்ள தேசிய பாடசாலைகளில் சேவை புரியும் 3766 ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான கடிதங்கள் இன்று (29) அனுப்பி வைக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு பாடசாலையில் 10 வருட சேவைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் குறித்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இடமாற்றம் செய்வதற்கு அண்மையில் பாடசாலையொன்று காணப்படாமை, புரிந்துணர்வின் அடிப்படையில் உடன் மாற்றம் செய்துகொள்வதற்கும் உரிய ஆசிரியர்கள் காணப்படாமை ஆகிய காரணங்களின் போது, 10 வருடங்கள் நிறைவடைந்திருந்த போதிலும் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது