காரைதீவு பிரதேசசபையின்தவிசாளர் ஜெயசிறில்கடமைபொறுப்பேற்பு!

0
188
புதிய தவிசாளர் ஜெயசிறில் உத்தியோகபூர்வமாக கடமைபொறுப்பேற்பு!
(காரைதீவு   சகா)
காரைதீவு பிரதேசசபையின் புதிய தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்ட கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேற்று பிரதேசசபைக்குச்சென்று தமது கடமையைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.

 
அவரை சபை வாகனம் சென்று அழைத்துவந்தது. வாகனத்தில் வந்திறங்கியதும் அவரை பிரதேசசபைச் செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் நிதிஉதவியாளர்  முத்துலிங்கம் ரகுநந்தன் சிடீஓ. ஜௌபர்  உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வரவேற்றார்கள்.
 
பின்னர் அவர் தனது உத்தியோகபூர்வ அறைக்குள் சென்று சம்பவத்திரட்டுப்புத்தகத்தில் பதிவினை மேற்கொண்டார்.
அத்துடன் சபையின் சகல பிரிவுகளுக்கும் சென்று சகல ஊழியர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
 
முதல்நாள் பரிசாக கிழக்கிலிருந்து புதிதாக வெளிவரும் அரங்கம் பத்திரிகையினையும் சுவாமி விபுலாநந்தர் நாட்காட்டியையும் சகல ஊழியர்களுக்கும் வழங்கினார்.
 
அதேவேளை சபையின் உபதவிசாளர் ஏ.எம்.ஜாகீர் சபைக்கு வந்து தனது அறையில் தமது பதிவை மேற்கொண்டார். செயலாளர் அ.சுந்தரகுமாரும் உடனிருந்தார். உறுப்பினர் மு.காண்டீபனும் வருகைதந்திருந்தார்.