கொல்லநுலையில் சுவாமி விபுலானந்தரின் ஜனன தின நிகழ்வு

0
594

(படுவான் பாலகன்) உலகின் முதல் தமிழ் பேராசிரியரான சுவாமி விபுலானந்தரின் 126வது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் ஊர்வலமும், வழிபாடுகளும், விபுலானந்தரின் நினைவுரைகளும்  புதன்கிழமை(28) இடம்பெற்றன.

வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நினைவுரைகளை பாடசாலையின் ஆசிரியர்களான க.விவேகானந்தன், த.சதாகரன், சா.ஆரோக்கியம் ஆகியோர் நிகழ்த்தினர்.
மேலும், விபுலானந்தரின் உருவப்படத்தினை தாக்கிய ஊர்வலத்திலும் பாடசாலை மாணவர்கள் ஈடுபட்டதுடன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மலர்தூபி விபுலானந்தரை வழிபட்டனர்.