மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் பாடசாலையில் 42 பேர் 9A பெற்று மாவட்டத்தில் வரலாற்று சாதனை

0
465
(க.விஜயரெத்தினம்)

கடந்த வருடம்(2017) நடைபெற்ற க.பொ.சாதாரணப் பரீட்டையில் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் தேசிய பாடசாலையில் 42பேர் 9A சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில்  முதற்தடவையாக அதிகூடியவர்கள் சித்தியடைந்து,வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளதாக வின்சன்ட் உயர்தரப் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி.கரணியா சுபாகரன் தெரிவித்தார்.
அவர்மேலும் தெரிவிக்கையில்,பரீட்சைக்கு தோற்றியவர்களில் 99.3 வீதமானோர் உயர்தரம் படிக்க தகுதிபெற்றுள்ளார்கள்.42பேர்(9A),21பேர் 8ABயும்,5பேர்7A,2B சித்திகளையும் பெற்றுள்ளார்கள்.
இதேவேளை மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் 25பேர் 9Aகளையும்,13பேர் 8A,B களையும்,5பேர் 7Aகளையும்,7பேர் 6A களையும் பெற்று உயர்தரம் படிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக அதிபர் பயஸ் ஆனந்தராசா தெரிவித்தார்.மட்டக்களப்பு புனித  சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் 19 பேர் 9A களையும்,21 பேர் 8A,B களையும் பெற்றுள்ளதாக அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தெரிவித்தார்.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 8பேர் 9Aகளையும்பெற்றுள்ளார்கள்.