உலக பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மரதன் போட்டிகளில் கலந்து கொள்ள மட்டு இளைஞன் சுவிஸ் செல்கின்றான்.

0
1397

சுவிஸ்லார்ந்து (switzerland )நாட்டில் எதிர்வரும் மாதம் ஏழாம் திகதி இடம்பெற இருக்கும்  (world university cross conutry Race 2018 ) உலக பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மரதன் போட்டிகளில் கலந்து கொள்ள இலங்கை பல்கலைக்கழகங்கள் சார்பாக மண்முனை மேற்கு பிரதேச காஞ்சிரங்குடா கிராமத்தைச்சேர்ந்த இளைஞன் கோ.கோகுலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீட மாணவனான கோகுலநாதன்  மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தினை பூர்விகமாகக்கொண்டவர்.  இவர் கன்னன்குடா கண்ணகி இளைஞர் கழகத்தின் அங்கத்தவராக கடந்த காலத்தில் பல போட்டிகளில் பங்குபற்றிவருகிறார்.

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் மரதன் போட்டிகளிலும்,  800M, 1500M, 10000M ஓட்டப்பிரிவுகளிலும் தனெக்கென தனி இடத்தினை தக்கவைத்துள்ளதோடு   பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்குபற்றி சிறப்பாக திறமைகளைவெளிப்படுத்தி வருகின்ற வீரர்.

அண்மையில்   பேராதனை பல்கலைகழகத்தில் நடைபெற்ற தெரிவுப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றதன் மூலம்  இந்த வாய்ப்பினை பெற்றுள்ளார்.

இவருடன் யாழ்ப்பாணம் , ஜயவர்தனபுர,சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்ககள் மூவர் தெரிவாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

இவரின் திறமையை பாராட்டிய முனைப்பு நிறுவனத்தினர்   அவரை அண்மையில் மட்டக்களப்பு முனைப்பு காரியாலயத்தில் சந்தித்து அவரின் தேவைகளை கேட்டறிந்து சில ஊக்குவிப்புக்களையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.