காரைதீவிலும் கையெழுத்து சேகரிப்பு.

0
124
ஆயுள்  தண்டனை வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்தசுதாகருக்கு  அவரது பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பொது மன்னிப்பு வழங்கும் கோரிக்கையை முன்வைத்து  தமிழ் இளைஞர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காரைதீவில்  கையெழுத்துக்களை சேகரித்து ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பும் நடவடிக்கை நேற்று (27) மாலை முன்னெடுக்கப்பட்டது.

 
காரைதீவு ஸ்ரீகண்ணகை அமம்மன்  ஆலய சந்தியில்  சர்வ மத தலைவர்களின் முன்னிலையில் நேற்றுமாலை 4மணியளவில்   ஆரம்பமானது இதில் காரைதீவு  பிரதேச இளைஞர்கள்   பொதுமக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு  கையொப்பமிட்டனர்.
 
நேற்று  மாலை 6 மணிவரை வரை  கையெழுத்து சேகரிப்பு   நடைபெற்றது.   திங்கட்கிழமை  அக்கரைப்பற்ளில் அக்கரைப்பற்று இளைஞர்களாலலும்  மறுநாள் செவ்வாய்கிழமை திருக்கோவிலிலும் இளைஞர்களால் கையெழுத்து சேகரிப்பு முன்னெடுக்கப்பட்டு  சேகரிக்கும் அனைத்து கையெழுத்துக்களும் ஒன்றிணைக்கப்பட்டு கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு  மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கப்கோரும் பொதுமக்களின் கோரிக்கை மகஜர்  அனுப்பி வைக்கப்டவுள்ளது.