இங்கிலாந்து லோட்ஸ் மைதானத்தில் இலங்கையரின் குரல்……

0
1979
கிரிக்கெட்டின் பிறப்பிடம் என அழைக்கப்படும் இங்கிலாந்தில் இங்கிலாந்திற்கே பெருமை சேர்த்த லோட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கையரான திரு.கேதீஸ் மட்டக்களப்பில் புதிதாக உருவாக்கப்பட்டு கொண்டிருக்கும் புற்தரையிலான மைதானத்தை பற்றி குரல் கொடுத்துள்ளார்.

 மட்டக்களப்பில் தாய் கழகமாக கொண்டு செயற்படும் கோட்டைமுனை விளையாட்டு கழகம் 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு கழகமாகும் இக்கழகத்தில் இருந்து புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தவர்கள் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தை தாம் வாழும் நாட்டில் உருவாக்கி அங்கிருந்து தம்மால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளார்கள். இவ்வாறு லன்டன் கனடா போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்ட கழகங்கள் இலங்கையில் உள்ள தாய் சங்கத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட்டை முன்னேற்றும் நோக்குடன் கிழக்கிலங்கையிலேயே புற்தரையிலான ஒரு கிரிக்கெட் மைதானத்தை உருவாக்க முடிவெடுத்து அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக இம்மைதானம்; பற்றிய விபரத்தை அறிந்து கொள்வதற்கான லண்டனில் உள்ள கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கு பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் சம்மேளனம் ஒரு அழைப்பை விடுத்திருந்தது அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தற்போது மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் புற்ததையிலான கிரிக்கெட் மைதானம் பற்றிய ஆய்வை லண்டன் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் உதவி பொருளாளர் திரு.கேதீஸ்குமரன் இலங்கையர் என்ற பெருமையுடன் விளக்கவுரை நிகழ்த்தி கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கு அழியா புகழை பெற்றுத்தந்துள்ளார். இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு லன்டன் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் செயலாளர் திரு.உதயராஜ் பொருளாளர் திரு.ரவீந்திரன் உதவி முகாமையாளர் திரு.கோபிநாத் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்