முனைக்காட்டில் கூத்தியல் நூல் வெளியீடு

0
617

(படுவான் பாலகன்) இளங்கலைஞர் மகேந்திரன் கேதீஸ்வரனால் எழுதப்பட்ட கூத்து இயல் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை மாலை முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

நாகசக்தி கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலின் முதல்பிரதியை நூலின் ஆசிரியரின் பெற்றோரிடமிருந்து, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் பெற்றுக்கொண்டார்.

நூலுக்கான நயவுரைகளை கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அ.மோகனதாஸ், சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் த.மலர்ச்செல்வன், அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.நமசிவாயம் ஆகியோர் வழங்கினர்.

குறித்த நூலில் நந்தியின் மகிமை, மனிசி எங்கே? உழவர் பெருமை, மதுவின் கொடுமை ஆகிய நான்கு தலைப்பிலான கூத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.