இடைநிலை பிரிவு மாணவர்களின் அடைவினை அதிகரிக்கும் நோக்கில் புத்தக வெளியீடு ​

0
163

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திலுள்ள செங்கலடி விவேகானந்தா வித்தியாயத்தில், ஆசிரியர் இராசசிங்கம் நாகேந்திரன் அவர்களால் இடைநிலை பிரிவு மாணவர்களின் அடைவினை அதிகரிக்கும் நோக்கில் புத்தக வெளியீடு விழா இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் முதல்வர் கி. சிவலிங்கராஜா தலைமையில் பாடசாலை அபிவிருத்தி குழுவின் ஒழுங்கமைப்பில், பாடசாலை மண்டபத்தில் இவ் வெளியீட்டு நிகழ்வு வெள்ளிக்கழமை 23ஆம் திகதி நடைபெற்றது.

இடைநிலை பிரிவு மாணவர்களின், வரலாற்றுப் பாட அடைவினை அதிகரிக்கும் நோக்கில், தரம் 7 மாணவர்களுக்கான இலகு வழிகாட்டி துணைப் பாடநூல் தன்னால் வெளியிடப்பட்டதாக ஆசிரியர் இரா.நாகேந்திரன் இதன்போது தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, கௌரவ அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான பொ.சிவகுரு, நா.குணலிங்கம், ஆசிரிய மத்திய வள நிலைய முகாமையாளர் வ.பஞ்சலிங்கம் , சிறப்பு அதிதிகளாக கல்மடு விவேகானந்தா வித்தியாலய அதிபர் சா.பாலச்சந்திரன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான த.அகிலன், ப.நல்லரெட்ணம், அழைப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக 2016-2017 ஆண்டு கல்வி முதுமாணி கற்கை ஆசிரிய மாணவர்கள், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பா.ச.சங்க அங்கத்தவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர் கல்வியின் அடைவு மட்டம் வீழ்ச்சியடைந்து காணப்படும் தற்போதைய காலத்தில் இவ்வாறான கல்வி நிலையை உயர்த்தும் வகையில் இவ்வாறான புத்தக வெளியீடுகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்கினை வகிக்கும் என இந் நிகழ்வின்போது கல்வித் திணைக்கள அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.