பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 69 ஆவது பிறந்த தினம் இன்று

0
461

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 69 ஆவது பிறந்த தினம் இன்று (24) கொண்டாடப்படுகின்றது.

இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள விகாரைகளிலும் ஏனைய பிற சமயத்தளங்களிலும் சமய நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய நாளில் ஏழைகளுக்கு உணவளிக்கும் நிகழ்வும், வசதியற்றவர்களுக்கு உணவுப் பொருட்கள், ஆடை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன வழங்குதல் போன்ற பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதமருக்கு ஆசீர்வாதம் வேண்டி முன்னெடுக்கப்படும் முக்கிய நிகழ்வு இன்று மாலை 5.00 மணிக்கு சேதவத்த புரான விகாரையில் இடம்பெறவுள்ளது.