விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

0
316

விவேகானந்தா தொழில்நுட்பக்கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது நேற்று காலை 9 மணிக்கு தலைவர் பாஸ்கரன் தலைமையில் ஆரம்பமானது. இந் நிகழ்வானது சுவாமி விவேகானந்தரிள் 155ஆவது ஜனன தினைத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு விவேகானந்தா தொழில்நுட்பக் கலர்லூரியில் தொழில் பயிற்சியை முடித்த 89 மாணவர்கள் Nஏ,ஞ- 4,3 எனும் தரச்சான்றிதழ்களும் அதனோடு 65 மாணவர்கள் ஏஊழுவு சான்றிதழ்களையுமு; பெற்றனர்.

இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி பிரபு பிறேமானந்தா ஜீ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மனிதர்கள் வாழ்க்கையில் தொழில் பயிற்சி எவ்வாறு அவசியமோ அது போன்று உடலை நோய்களின்றி சிறப்பாக இருக்க உடற்பயிற்சி அவசியம். அது போலவே மனத்தினை சுத்தமாகவும் நன்றாகவும் வைக்க மனப்பயிற்சி தேவை என்றும் தற்காலத்தில் இறைவனின் நம்பிக்கை இல்லாது குறைவடைந்து வருகின்ற காலத்தில் நாம் நல்ல மனிதர்களாக வாழ்வது மற்றவர்களையும் வாழவைக்க பழக வெண்டும், உண்மையிலேயே ஒரு குழந்தை வைரமோதிரத்தை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு றபர் பந்தும் வைர மோதிரமும் ஒன்றாகத்தான் அந்தக் குழந்தைக்குத் தெரியும் அது போன்றுதான் நாம் பெறுமதியான காலத்துடன் நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் கலந்து கொண்டு உரையாற்றுகையில், நமது மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளது. மாவட்ட மட்டத்தில் 24ஆவது இடமாகவும், மாகாண ரீதியில் 9ஆவது இடத்தில் உள்ள என்பது கவலை அழிக்கிறது. இதனை மாற்றி அமைக்கின்ற வகையில் இந்த விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி செயல்படுவது பாராட்டத்தக்கது. பல்கலைக்கழகம் போக முடியாத மாணவர்கள் இவ்வாறான பயிற்சிகள் ஊடாக தங்கள் வாழ்க்கை கல்வியை அடைவதற்கு சிறந்த வாய்ப்பாக இந்த கல்லூரி மாணவர்களுக்கு அமைந்துள்ளது.

நமது கல்வி அமைப்பானது முழுக்க முழுக்க பரீட்சையை மையமாகக் கொண்டு அமையாமல் இவ்வாறு வாழ்க்கைக்கான தொழில் கல்வியாக மாறுகின்றபோது மாணவர்கள் சிறந்த பலனை அடைகின்றனர். மட்டக்களப்பில் சமூத்திர பல்கலைக்கழகம் , மற்றும் தொழில்நுட்பக்கல்லூகள் உல்லாச பயணத்துறைபோன்றவற்றில்பயிற்சிகளைப் பெற்று நமது மாவட்டத்தில் சாதனையாளராக சாதிக்க எல்லோரையும் வாழ்த்துத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சாதனையாளர்களுக்கான சான்றிதழ் வழக்கப்பட்டது. இந் நிகழ்வில், பிரதேச செயலாளர்கள் , விரிவுரையாளர்கள் அரச அதிகாரிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் கலந்து கொண்டனர்.